கொக்கேய்ன் கடத்திய அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீரர்!

117815281 gettyimages 51226407
117815281 gettyimages 51226407

அவுஸ்திரேலியாவின் ஒலிம்பிக் படகோட்ட வீரரான நாதன் பாகலே மற்றும் அவரது சகோதருக்கு எதிராக 152 மில்லின் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

152 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்னை நாட்டுக்குள் கடத்த முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வியாழனன்று தெரிவித்துள்ளது.

சதித்திட்டத்தில் ஈடுபட்ட நாதன் பாகலே மற்றும் அவரது சகோதரர் ட்ரு பாகலே ஆகியோருக்கும் இந்த மாத இறுதியில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் இருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வெளிநாட்டு கப்பலில் இருந்து 650 கிலோகிராம் கொக்கேய்னை இவர்கள் கைமாற்றம் செய்து நாட்டுக்குள் கொண்டு வந்த சமயம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய படையினரின் வான்வழி கண்காணிப்பு மற்றும் கடற்படையினரின் விரைவான ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் கடந்த 2018 ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டில், ஏதென்ஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் நாதன் பாகலே இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.