ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா!

2020 09 22 1 1
2020 09 22 1 1

ஐ பி எல் 2021 சீசன் வருகிற 9-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐ பி எல் தொடரில் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான அவர் 473 ரன்கள் விளாசினார். சராசரி 31.53-ம் ஸ்டிரைக் ரேட் 124.8-ம் வைத்துள்ளார்.