முதல் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டத்தை பெற்ற ஹூபர்ட் ஹர்காஸ்!

EyJ z08W8AEhSfT
EyJ z08W8AEhSfT

மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் இத்தாலிய இளைஞரான ஜானிக் சின்னரை வீழ்த்தி போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் தனது முதல் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டத்தை பெற்றுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஜானிக் சின்னரும், ஹூபர்ட் ஹர்காஸும் மோதினர்.

சுமார் ஒரு மணிநேரமும் 43 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் 24 வயதான ஹுர்காஸ் 7-6 (7-4) 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஏடிபியின் உயர்மட்ட பட்டங்களில் ஒன்றை வென்ற முதல் போலந்து ஒற்றையர் வீரர் என்ற பெருமையை உலக டென்னிஸ் தரவரிசையில் 37 ஆவது இடத்தில் இருக்கும் ஹுர்காஸ் பெற்றார்.

நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் மியாமி ஓபன் தொடரில் பங்கேற்கவில்லை. இருப்பினும் ஹுர்காஸ் உலக நம்பர் 5 வீரரான ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ் மற்றும் உலக நம்பர் 8 வீரரான ஆண்ட்ரி ரூப்லெவ் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.