கோப் குழுவில் மீண்டும் முன்னிலையாகவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

sl cricket
sl cricket

கோப் குழு என அழைக்கப்படும் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மீண்டும் முன்னிலையாகவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்படுத்தல்கள் இன்றி கோப் குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கூட்டம் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் உரிய தயார்படுத்தலுக்காக ஒருமாத கால அவகாசம் கிரிக்கட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றைய கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 20 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு, இலங்கை துவிச்சக்கரவண்டி சங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.