டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்த வட கொரியா!

27e3fe9436e24aa2bb182e8e142fdf76
27e3fe9436e24aa2bb182e8e142fdf76

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஏற்பட்ட உலக பொது சுகாதார நெருக்கடியிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் பொருட்டு நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவினை எடுத்துள்ளதாக வடகொரியாவின் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் ஒரு வலைத்தளம் திங்களன்று தெரிவித்துள்ளது.

பனிப்போருக்கு மத்தியில் 1988 ஆம் ஆண்டு சியோல் (தென்கொரியா) ஒலிம்பிக்கை புறக்கணித்ததன் பின்னர், கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா தவறவிட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கை கடந்த கோடையில் ஜப்பான் நடத்தவிருந்தது. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அது இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.