இலங்கை தேசிய கிரக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்!

107425551 gettyimages 1130215705 4
107425551 gettyimages 1130215705 4

இலங்கை தேசிய கிரக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஏப்ரல் 11 ஆம் திகதி தடுப்பூசியின் முதல் டொஸ்ஸும், மே 25 இரண்டாவது டொஸ்ஸும் அணிக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.