புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது!

202003061501521461 Tamil News Super Division Hockey League Gst Excise tax team won SECVPF
202003061501521461 Tamil News Super Division Hockey League Gst Excise tax team won SECVPF

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி மறுபடியும் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இந்திய அணி வீரர்கள் லலித் உபாத்யாய் 25-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 58-வது நிமிடத்திலும் பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தனர்.

அர்ஜென்டினா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அசத்தியது. அபாரமாக செயல்பட்ட இந்திய அணியின் கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதாக் ஆட்டநாயகன் விருது பெற்றார் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக அர்ஜென்டினாவை சாய்த்தது. முந்தைய நாளில் நடந்த ஆட்டத்தில் பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி (8 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.