நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் சர் ரிச்சர்ட் ஹேட்லி விருதுக்கு தேர்வு!

201805251649551050 Kane Williamson County cricket season curtailed due to IPL SECVPF
201805251649551050 Kane Williamson County cricket season curtailed due to IPL SECVPF

நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2020-2021-ம் ஆண்டுக்கான விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் சர் ரிச்சர்ட் ஹேட்லி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். தேவன் கான்வே ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 251 ரன்கள் விளாசினார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டபுள் செஞ்சுரி விளாசினார்.

கான்வே டி20 கிரிக்கெட்டில் 473 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 59. ஸ்டிரைக் ரேட் 151. நான்கு அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் 225 ரன்கள் விளாசினார்.