துடுப்பாட்டச்சுற்றுப்போட்டியில் சக்தி கழகம் சம்பியனானது!

e21b29c5 daee 489c 82a1 2fa092adb490
e21b29c5 daee 489c 82a1 2fa092adb490

ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் “ஹில்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்” விளையாட்டுக் கழகத்தின் 2021ஆம் ஆண்டிற்கான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த இருதினங்கள் இடம்பெற்றது.

22 அணிகள் பங்கு பற்றிய சுற்றுப்போட்டியில்
இறுதிப்போட்டியில் கோமரசங்குளம் பரலோகமாதா விளையாட்டுக் கழகமும் , சிதம்பரபுரம் சக்தி விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடாத்திய நிலையில் சக்தி விளையாட்டுக் கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியது.

வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 20 000/= பணப்பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 5000/= பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கழகத்தின் தலைவர் சிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற போட்டிநிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் வெற்றிபெற்ற அணிகளிற்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.