பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

625.0.560.350.160.300.053.800.668.160.90 2 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 2 1

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

டெல்லி அணியில் ஹெட்மையர் நீக்கப்பட்டு, ரபடா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். உனத்கட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.