ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து ஆறு அணிகள் விலகல்

AP 21109385893529
AP 21109385893529

ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில அணிகளும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன.

அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில அணிகளே இவ்வாறு விலகியுள்ளன.

ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சேனல், டாட்டன்ஹாம், செல்சியா ஆகிய குழுக்களும் ஸ்பெயினின் அட்லெட்டிக்கோ மட்ரிட், ரியால் மட்ரிட், பார்சிலோனா ஆகிய குழுக்களும் இத்தாலியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறும் யுவெண்டெஸ், ஏசி மிலான், இண்டர் மிலான் ஆகிய குழுக்களும் இந்த புதிய லீக்கில் விளையாட விண்ணப்பித்திருந்தன.

இந்த பிரத்தியேக லீக் உருவாக்கப்பட்டு, குழுக்கள் முதலில் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் விளையாடி அதன்பின் தகுதிச் சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச் சுற்று ஆகியவற்றில் விளையாடும் என்று திட்டமிடப்பட்டது.

எனினும் இதற்கு எதிராக பல சர்ச்சையும் அதிருப்தியும் குறிப்பாக ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

இதைப்போன்று பெரிய அணிகளை வைத்துப் போட்டி நடத்தும் பட்சத்தில் சிறிய அணிகள் கடுமையாக பாதிக்கும் என்று பலர் எண்ணுகின்றனர்.

மேலும், இதைப்போன்று ஒரு போட்டி நடைபெறும் பட்சத்தில் சிறிய நாடுகளில் இருக்கும் அணிகள் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்பதால் இது காற்பந்து ஆட்டத்தை மேலும் வளர விடாது என கருத்துகள் நிலவுகின்றன.