பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியருக்கு கொரோனா!

Corona Virus mutation d614g 1
Corona Virus mutation d614g 1

பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றிவரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(22) மாலை மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது, குறித்த ஊழியருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மைதான ஊழியர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பல்லேகல காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.