பங்களாதேஷிற்கெதிரான போட்டியில் திமுத் இரட்டைச் சதம் திமுத்

320209
320209

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி இரட்டைச் சதத்தை இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண பதிவு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11 ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரட்ண பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ண, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.

இலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டைச் சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும் மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும் மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும் சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.

மேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளனர்.

ஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் தலா ஒரு முறை இரட்டைச் சதங்களை விளாசியுள்ளனர்.

இந்நிலையில் பங்களாஷே் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக 4.50 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது.

பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் திமுத்து கருணாரத்தன 234 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

இந்நிலையில், நாளை 5 ஆவதும் இறுதியும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.