பங்களாதேஷிற்கெதிரான போட்டியில் 648 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!

1619335785 SL VS BAN 2
1619335785 SL VS BAN 2

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் இறுதி நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 648 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

அதன்படி, பங்களாதேஷ் அணியை விட இலங்கை அணி 107 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 244 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோல், தனஞ்சய டி சில்வா தனது 7 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்து 166 ஒட்டங்களை குவித்தார்.

மேலும், லஹிரு திரிமான்ன 58 ஒட்டங்களையும், வனிந்து ஹசரங்க 43 ஓட்டங்களையும் மற்றும் நிரோஷன் திக்வெல்ல 31 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டஸ்கன் அஹமட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களையும் தைஜுல் இஸ்லாம 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட திர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சில் 541 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சான்டோ 163 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அணித்தலைவர் மோமினுல் ஹக் 127 ஒட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

முஸ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஸ் அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.