இந்தியாவுக்கு 50000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சார்!

Ez5YwyEVEAE1X85
Ez5YwyEVEAE1X85

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சார் பேட் கம்மின்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் அமைக்கப்பட்ட நிதி திரட்டும் திட்டமான பி.எம். கேர்ஸுக்கு 50,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நன்கொடையினை அவர் வைத்தியசாலையில் ஆக்ஸின் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இதுபோன்ற பங்களிப்பை பகிரங்கமாக அறிவித்த முதல் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் ஆவார்.

அவர் நன்கொடையினை வழங்கியது மாத்திரமன்றி தனது சக ஐ.பி.எல். வீரர்களையும் பங்களிப்பு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.