இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன 2021-2025 காலப்பகுதிக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20 ஆம் திகதியுடன் நிறைவு!

z p12 Covid 19
z p12 Covid 19

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) 2021-2025 காலப்பகுதிக்கான தேர்தலுக்குரிய வேட்பு மனுதாக்கல் இம்மாதம் 20 ஆம் திகதி காலை 11 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, தலைவர் பதவிக்கு களுத்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் வைத்தியர் வி.மணில் பெர்னாண்டோ பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவரது குழுவில்,

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவர்களாக, மெர்கன்டைல் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் மற்றும் கொழும்பு எப்.சி.யின் உரிமையாளர் மற்றும் ஈ.எப்.எல் நிர்வாக இயக்குனருமான சைப் யூசூப், இரத்னபுர உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் மற்றும் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான காஞ்சன ஜெயரத்ன, மன்னார் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மாவனெல்ல உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் அப்துல் காபர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

செயலாளராக பொல்கஹவெல உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் அனுர டி சில்வா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, பிரதி நிர்வாக செயலாளராக மாத்தறை உதைப்பந்தாட்ட லீக்கின் செயலாளர் டி.எச்.எஸ். இந்திகவும்,பிரதி தொழில்நுட்ப செயலாளராக வென்னப்புவ உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் ரோஹித பெர்னாண்டோவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சம்மேளனத்தின் பொருளாளராக தேசிய சேவை உதைபந்தாட்ட சங்கத்தின் (NSSA) பொருளாளர் சுதாகர் தியாகராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உதவி பொருளாளர் ஒட்டமாவடி உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எஸ் எம் தவ்பீக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.