யாழில் இடம்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கரம் போட்டி

417025bb 6a29 49a2 bf43 da89edcfa01a
417025bb 6a29 49a2 bf43 da89edcfa01a

33’வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின், யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் கரம் போட்டியானது வல்வெட்டி கருணாநிதி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகளில் ஆண்களுக்கான கரம் ( ஒற்றையர் பிரிவில் ) போட்டியில் றேஞ்சர்ஸ் இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும், கரவெட்டி மத்தி இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

கரம் இரட்டையர் பிரிவில் முதலாம் இடத்தை கரவெட்டி மத்தி இளைஞர் கழகமும் இரண்டாம் இடத்தை விபுலானந்தா இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.

அதே போல பெண்களுக்கான கரம் ஒற்றையர் பிரிவில் முதலாம் இடத்தை விபுலானந்தா இளைஞர் கழகமும் இரண்டாம் இடத்தை நவஜீவன்ஸ் இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன. கரம் இரட்டையர் பிரிவில் முதலாம் இடத்தை விபுலானந்தா இளைஞர் கழகமும் இரண்டாம் இடத்தை சிவகுமரன் இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.