இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடும் பங்களாதேஷ் அணி ஆட்டநேர முடிவின் போது 177 ஓட்டங்களை பெற்றது!

1618978921 bangladesh vs sri lanka 2
1618978921 bangladesh vs sri lanka 2

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடும் பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது 5 விக்கட்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது

தமது முதலாவது இன்னிங்சில் பங்களாதேஷ் அணி சகல விக்கட்களையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 7 விக்கட்களை இழந்து 493 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி இருந்தது.

இதன்படி இந்த போட்டியில் வெற்றிபெற பங்களாதேஸுக்கு 437 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நாளை போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இடம்பெறவுள்ள நிலையில், பங்களாதேஸ் அணி வெற்றிபெற இன்னும் 260 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.