இன்று மும்பை இந்தியன்ஸ் – சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி!

16 1
16 1

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தைச் சேர்ந்த 5 பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அமைப்பின் அருண் ஜெய்ட்லி மைதானத்தில், எதிர்வரும் 8ஆம் திகதிவரை சில ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், கடமையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் எவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரொஹான் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.