தொடரை தக்க வைப்பதற்கு முனையும் இந்திய அணி

pollard vs kohli 1
pollard vs kohli 1

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரின் 2வது போட்டி நாளைய தினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

நாளை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வியடையும் பட்சத்தில் தொடரை இழக்க வேண்டிய நிலையேற்படும்.

பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. கடைசியாக 2006ம் ஆண்டு தனது நாட்டில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக 9 தொடர்களை இழந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலிடத்தில் உள்ளது. 131 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி 63 போட்டிகளிலும் இந்திய அணி 62 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.