மேற்கிந்திய தீவுகளை பழி தீர்த்த இந்தியா

ind wi
ind wi

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107ஓட்ட ங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போழுது விளையாடிவருகின்றது .

அந்தவகையில் கடந்த திங்கட்கிழமைகிழமை நடைபெற்ற முதற்போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரின் அதிரடியான துடுப்பட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணிசார்பில் லோகேஷ் ராகுல் 102 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 159ஓட்டங்களையும் அதிகப்படியாகப்பெற்றுக்கொண்டனர் அவர்களைத்தவிர ஸ்ரேயஸ் ஐயர் 53 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 39 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர் .

இதேவேளை பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஷெல்டன் கொற்ரெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன், கீமோ போல், அல்ஷாரி ஜோசப் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 388 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைமாத்திரம் பெற்றுக்கொண்டது.

துடுப்பட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 75 ஓட்டங்களையும் ஷாய் ஹோப்78 ஓட்டங்களையும்அதிகப்படியாக பெற்றனர்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் முகமது ஷமி மற்றும்குல்தீப் யாதவ் ஆகியோர் மூன்று விக்கட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர் .

இதேவேளை ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் தன்வசப்படுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் 1-1என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை தொடரின் வெற்றியாளராக மகுடம் சூட்டப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.