நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

sl vs ban
sl vs ban

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

தங்களது தோல்வியை முழுமையாக தவிர்க்கும் நோக்கில் சவாலுடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.

இலங்கை-பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் பங்களாதேஷ் அணியால் ஒரு முழு தொடரையும் வெல்ல முடியாமல் போயிருந்தது.

இன்றைய போட்டியையும் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி இழந்தால், பங்களாதேஷ் அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.