ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்!

image 2021 06 01 231121
image 2021 06 01 231121

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாசிலி லிவிட்டை (கஜகஸ்தான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இந்த முடிவை எதிர்த்து இந்திய அணி தரப்பில் செய்யப்பட்ட அப்பீல் நிராகரிக்கப்பட்டது. 64 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஆசிய போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து வென்ற 5-வது பதக்கம் இதுவாகும். இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 15 பதக்கம் வென்றது. ஆசிய போட்டியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு இதுவாகும்.