இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான தொடர் சிறந்த டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்றது!

20210119 105132
20210119 105132

2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை நடந்து முடிந்த போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்திற்கான இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதுவரை இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்தது.

இதன்படி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் பரபரப்பாக இடம்பெற்ற 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

சிறந்த டெஸ்ட் தொடரை தெரிவு செய்வதற்காக உலகம் முழுவதும் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது வாக்குகளை அளித்திருந்தனர்.

இதன் முடிவில் 2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்திற்கான இந்தியா மற்றும் அஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றது.

இதனை சர்வதேச கிரிக்கட் பேரவை தமது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

2020ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2 இற்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.