இலங்கைக்கு எதிரான போட்டி – இந்திய அணி அறிவிப்பு!

1623386048 Shikhar Dhawan 2
1623386048 Shikhar Dhawan 2

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 13 ஆம் திகதி ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளது. ஜூலை 21 ஆம் திகதி டி-20 தொடர் தொடங்கவுள்ளது. ஜூலை 25 ஆம் திகதி கடைசி டி 20 போட்டி நடக்க உள்ளது. போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய அணியில் தவான் (தலைவர்), பிரித்வி ஷா, தேவதத் பாடிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இசான் கிஷன், சஞ்சு சாம்சன், சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா இடம்பெற்றுள்ளனர்.
இந்த இரு தொடர்களிலும் தமிழக வீரர் நடராஜனுக்கு இடமளிக்கப்படவில்லை.