4வது போட்டியில் வெற்றி பெற்றது அவுஸ்ரேலிய அணி

australia
australia

5 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் (ஆஷஸ்) தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்த நிலையில் இத்தொடரின் 4வது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது, அவுஸ்ரேலிய அணி சார்பாக ஸ்டடீவ் ஸ்மித் 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் 301 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்ரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கட் இழப்பிற் 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு 383 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்ரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது,