US Open பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்

nadal with trophy
nadal with trophy

உலக டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள ரபேல் நடால் மற்றும் 4ம் இடத்திலுள்ள டேனியல் மெட்வெடேவிற்குமிடையில் US Open பட்டத்திற்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் ரபேல் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவிடம் இருந்து தனது நான்காவது US Open பட்டத்தையும் தனது 19 வது ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினார். நடால் 2019 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது பட்டத்தினை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 வயதை எட்டிய பின்னர் ஐந்து ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் மனிதராக நடால் புதிய சாதனையினை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.