இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் வசம்

pakistan 3
pakistan 3

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் தொடரை 1-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் அணி முதலாவது இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆசாத் சாபிக், பாபர் அசாம் அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் 271 ஓட்டங்கயுளுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அணி சார்பாக டினேஸ் சந்திமல் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சஹீம் அப்ரிடி 5 விக்கட்டுக்களையும் மொஹம்மட் அப்பாஸ் 4 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கட் இழப்பிற்கு 555 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில் அபித் அலி 174 ஓட்டங்களையும், ஷான் மசூத் 135 ஓட்டங்களையும், அசார் அலி 118 ஓட்டங்களையும், பாபர் அசாம் 100 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

475 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்னான்டோ 102 ஓட்டங்களையும், நிரோசன் டிக்வெல்ல 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நசீம் ஷா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக அபித் அலி தெரிவு செய்யப்பட்டார்.