டோக்கியோ ஒலிம்பிக் 2020 தன்னார்வ தொண்டருக்கு கொவிட்

Tokyo Olympics
Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப பணிகளை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டர்கள் குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

அத்துடன் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியான நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாளை மறுதினம் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வடைந்துள்ளது.