2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த அவுஸ்திரேலியா தகுதி!

Australia 1 850x460 acf cropped
Australia 1 850x460 acf cropped

2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியினை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழு இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா இறுதியாக சிட்னியில் 2000ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டியினை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தகுதி பெற்றுள்ளது.

அதேநேரம், கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஜப்பானில் இடம்பெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.