இலங்கை அணிக்கு 82 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

107425551 gettyimages 1130215705
107425551 gettyimages 1130215705

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய இலங்கை அணி 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.