2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தில் சீனா!

1627549040 4822458 hirunews
1627549040 4822458 hirunews

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கங்களுடன் சீனா வென்றுள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா, 13 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக 37 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆம் இடத்திலும், 7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 25 பதக்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் குழு 4ஆம் இடத்திலும் உள்ளது.

ஐந்தாவது இடத்திலுள்ள அவுஸ்திரேலியா, 7 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.