பங்களாதேஷுக்கு எதிரான வரலாற்று முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது ஆப்கானிஸ்தான்

afghanistan
afghanistan

பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 1-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 342 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத்ஷா 102 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்சில் 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 260 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 398 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் நபி ஓய்வு பெறுகிறார் என்று ஆப்கானிஸ்தான் அணி மேலாளர் நாஜிம் ஜார் அப்துர் ராஹிம்சாய் உறுதிப்படுத்தியுள்ளார்.