ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆதரவு!

123625
123625

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இணைப்பதற்கான தமது ஆதரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய 2028 லோஸ்ஏஞ்சல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது தங்களது இலக்கு என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

30 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட அமெரிக்க ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை மீள இணைப்பது பொருத்தமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1900ஆம் ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் பெரிய பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் அதில் பங்கேற்றன.

இதன்படி, 128 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதற்கிடையில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்படவுள்ளது.

இந்த செயற்பாடு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.