மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலுடன் பொலிவியாவை தோற்கடித்த ஆர்ஜென்டீனா!

RZLLP5RM65IYRAMRTOYOW65RNE
RZLLP5RM65IYRAMRTOYOW65RNE

2022 ஃபிஃபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசிலுடனான போட்டியின் வியத்தகு இடை நிறுத்தத்திற்கு பின்னர் ஆர்ஜென்டீனா பொலிவியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

கோபா அமெரிக்கா சாம்பியன்கள் ஃபிஃபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் தங்கள் இடத்தை வலுப்படுத்த வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிப் போட்டியில் தங்கள் எதிரிகளை இலகுவாக தோற்கடித்தனர்.

இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்தார். 

அவரது 77, 78 மற்றும் 79 ஆவது கோல்கள் அவரது தேசிய தரத்திற்கான ஏழாவது ஹெட்ரிக் சாதனையாக பதிவானதுடன், பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையையும் முறியடித்தது.