முழுமையாக இருபதுக்கு20 தொடரை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா!

SriLanka SouthAfrica
SriLanka SouthAfrica

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில், நாணய சுற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில் குசல் ஜனித் பெரேரா 3 பவுண்டரிகள் அடங்களாக அதிகபடியாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 23 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய,121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் குயின்டன் டி கொக் 7 பவுண்டரிகள் அடங்களாக 59 ஓட்டங்களையும், ரீசா ஹென்ரிக்ஸ் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்களாக 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய தென் ஆபிரிக்க அணி 3 -0 என்ற அடிப்படையில் இருபது20 தொடரை கைப்பற்றியது.