2 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார் புருண்டி வீராங்கனை!

Sports World Record
Sports World Record

பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புருண்டி நாட்டு வீராங்கனையான பிரான்சின் நியொன்சபா உலக சாதனையை ஏற்படுத்தினார்.

குரெஷியாவின் ஸெக்ரெப் நகரில் நடைபெற்ற 71ஆவது போரிஸ் ஹென்சோகோவிக் ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டித் தூரத்தை 5 நிமிடங்கள் 21.56 செக்கன்களில் ஓடி முடித்து உலக சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார் பிரான்சின் நியொன்சபா.

1994 இல் பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சோனியா ஒ சுல்லிவன் எனும் அயர்லாந்து நாட்டு வீராங்கனையானால் போட்டித் தூரத்தை  5 நிமிடங்கள் 25.36 செக்கன்கள் நேரப்பெறுதியில் ஓடி முடித்தமையே உலக சாதனையாக இருந்தது. இதனை‍ையே தற்போது பிரான்சின் நியொன்சபா முறியடித்துள்ளார்.

புருண்டியைச் ‍ சேர்ந்த நியொன்சபா 2016 ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.