92 ஓட்டங்களுக்குள் சுருண்டது ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!

download 2 6
download 2 6

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி, அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணியின் சார்பில் அதிகபடியாக தேவ்தத் படிக்கல் 22 ஓட்டங்களை பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் குறைந்தளவான ஓட்டங்களை ரோயல் செலஞ்சர்ஸ் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் அண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், 93 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது