சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில் வெற்றி!

download 23
download 23

ஐ.பி.எல் தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டி துபாயில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, சன்ரைஸஸ் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீ.நடராஜனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருடன் தொடர்பை பேணிய விஜய் சங்கர், மருத்துவ குழு உறுப்பினர்கள் அடங்கலாக 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் ஏனைய வீரர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படாத காரணத்தினால் இன்றைய போட்டியை தடையின்றி நடத்த ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.