ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Rajasthan Royals vs Punjab Kings IPL 20215
Rajasthan Royals vs Punjab Kings IPL 20215

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாகச் சுப்மன் கில் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சேத்தன் சகாரியா 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 172 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாட தயாராக உள்ளது.