ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

royal
royal

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 56ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதிவருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பிரித்வி ஷா 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மொஹமட் சிராஜ் 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துப்பெடுத்தாட உள்ளது.