கென்யாவை சேர்ந்த டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை மரணம்

202110131801060385 Agnes Tirop who represented Kenya in 5000m in Tokyo SECVPF
202110131801060385 Agnes Tirop who represented Kenya in 5000m in Tokyo SECVPF

கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப் (Agnes Tirop) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கென்ய வீராங்கனையான எக்னஸ் (25) அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாகியுள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபரை தேடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் இரண்டு முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுடன் அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.