பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

1625650502 sri lanka cricket players sign contract
1625650502 sri lanka cricket players sign contract

19 வயதிற்கு உட்பட்ட பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர் குழுவினால் இந்தக் குழாம் தெரிவுசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதற்கமைய, துனித் வெல்லலக தலைமையில் 20 பேர் கொண்ட அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதிற்கு உட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் நாளைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.