கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

kolkata knight riders 1602085072
kolkata knight riders 1602085072

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 194 ஓட்டங்களை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பஃவ் டூ ப்ளெய்சிஸ் 86 ஓட்டங்களையும், மோஹின் அலி 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நராயின் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 193 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.