மாற்றம் இன்றி களமிறங்குகிறது இலங்கை அணி!

srilanka flag
srilanka flag

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோதும் இரண்டாவது போட்டியில் அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, நமீபியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் பங்கேற்ற அதே அணியே இன்றைய போட்டியிலும் விளையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கும் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு முன்னதாக, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.