ஓய்வு பெரும் அவுஸ்ரேலிய கிரிக்கெட் பிரபலம்

download 51
download 51

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது சொந்த மண்ணில் நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்ரேலியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், களம் காணும் பதினொருவர் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நேற்று நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுப் பெறுவதாக சிடில் அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாக கூறியுள்ளார்.