இருபதுக்கு20 உலகக்கிண்ணம் – இன்றும் இரண்டு போட்டிகள்

World Cup 1
World Cup 1

இருபதுக்கு20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில், ஒரு வாரக் கால ஓய்விற்குப் பின்னர் இந்திய அணி இன்று(31) நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.

டுபாயில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முன்னர், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தான் அணியினால் தோற்கடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியத்துவமானது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, அரை இறுதிப் போட்டியில் சாதகமான நிலையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் அணி, நமீபியா அணியை அபுதாபியில் எதிர்கொள்கின்றது.