ஆப்கான் அணிக்கு அபார வெற்றி!

de 1
de 1

இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 62  ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் இன்று(31) நடைபெற்ற 2020 இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில்  நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.