16 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி!

skysports new zealand cricket 4716477
skysports new zealand cricket 4716477

2021 உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றையப்போட்டியில் 16 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 173 எனும் ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப்பெற்று தோல்வியைத் தழுவியது.