ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிக்கான முதற் கட்ட இலங்கை ரக்பி குழாம் தெரிவு!

col3rd leg team1133212826 7464708 27092019 AFF CMY
col3rd leg team1133212826 7464708 27092019 AFF CMY

இம்மாதம் 18 ஆம்,19 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய ரக்பி செவன்ஸ் ரக்பி தொடரில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்ட 20 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை ரக்பி குழாத்தினரை பயிற்சிகளுக்காக இலங்கை ரக்பி சம்மேளனம் அழைத்துள்ளது. 

இதன்படி, இந்த பயிற்சிகளின் நிறைவில் வீரர்கள் வெளிக்காட்டும் திறமை மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் இறுதி 12 பேர் கொண்ட இலங்கை ரக்பி குழாம் தெரிவு செய்யப்படவுள்ளதாக அசோக்க ஜயசேனவின் தலைமையிலான இலங்கை ரக்பி தெரிவுக் குழு தெரிவிக்கிறது.

கடந்த வாரம் பொலிஸ் பார்க்கில் நடைபெற்ற வோரியர் கிண்ண ரக்பி செவன்ஸ் தொடரில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல், திறமைகளின் அடிப்படையிலேயே  மேற்படி முதற்கட்ட இலங்கை ரக்பி குழாத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி தெரிவுக் குழு குறிப்பிடுகிறது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேர் கொண்ட இலங்கை ரக்பி குழாத்தில்  ஹிரன்த்த பெரேரா, சாமுவேல் ஒகேபேபோர், குஷான் இந்துனில், ரீசா ரபாய்டீன், ஜனிந்து டில்ஷான், சச்சித் சில்வா, நிரோஷன் சில்வா,வாகீஷ வீரசிங்க, சுரங்க கசுன்,சுதாரக்க திக்கும்புர, நாலக்க மதுரங்க, லசன்த்த குமார், நுவன் பெரேரா, இஷார மதுஷான், ரமித் டி சில்வா, அஞ்சுல ஹெட்டியாரச்சி, அதீஷ வீரதுங்க, கான்ச்சன ராமநாயக்க, சத்துர செனவீரத்ன,நிரோஷன் பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.